மதுரையில் 2 நாட்களுக்கு 144 உத்தரவு - காரணம் என்ன?
2 days 144 in madurai fopr thiruparangundram
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என்று தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனால், திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி ஆட்களுடன் பார்வையிட்டார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி நாளை இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
2 days 144 in madurai fopr thiruparangundram