இதுவரை இப்படி ஒரு சூப் குடிச்சிருக்கவே மாட்டீங்க..! வீட்டுலேயே செய்து பாருங்க..! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளுக்கு மாலையில் சூப் செய்து கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது கறிவேப்பிலையை வைத்து சத்தான கறிவேப்பிலை சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
பூண்டு - 4 பல்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 6 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கறிவேப்பிலை சூப் செய்வதற்கு முதலில் வாணலியில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி உருகியதும், அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து ஆறவைக்கவும்.

நன்கு ஆறியதும், அவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து பொடி செய்துக்கொள்ளவும்.

பின்பு மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அரைத்த விழுது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு அதனுடன் பொடித்து வைத்துள்ள பொடி, சர்க்கரை, உப்பு, மீதமுள்ள வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொதித்ததும் இறக்கி வடிகட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான கறிவேப்பிலை சூப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasty soup at home preparation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->