இனிப்பை சாப்பிட்ட பின் தேநீரின் இனிப்பு சுவை குறைவது ஏன் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இப்பொழுது நாம் ஒரு இனிப்பான பண்டத்தைச் சுவைக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அந்தப் பண்டத்தின் சுவையை நமது மூளை கிரகித்துக் கொண்டு, நம் நாவிற்கு இனிப்பு சுவையை உணர்த்துகிறது.

இந்நேரத்துக்கு நமது மூளை அந்த இனிப்பு அளவிற்கு பழக்கமாகி இருக்கும். இதனால், இதைவிடக் குறைந்த அளவிலான இனிப்பினை உணர இயலாது.

இப்பொழுது நாம் தேநீர் அருந்தும் போது, நமது மூளைக்கு அது ஏற்கனவே பழக்கமான அளவுக்கு இனிப்புத் தன்மையின் அளவு கிடைக்கவில்லை. அதனால் நமது மூளையினால் குறைந்த அளவு இனிப்புத் தன்மை கொண்ட தேநீரின் இனிப்பை உணர முடிவதில்லை.

அதே நேரம், தேநீர் அருந்திய பின்னர் இனிப்பு அல்லாத பிற சுவை கொண்ட பண்டத்தைச் சுவைக்கும் போது, அப்பண்டத்தின் சுவையை உணர்வதில் சிக்கல் ஏதும் வருவதில்லை.

அதற்கு காரணம், இனிப்பு சுவையை உணர்வதற்கான சுவை அரும்புகள் இப்போது வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. (ஒவ்வொரு சுவையையும் உணர்வதற்கென்று தனித்தனி அரும்புகள் நமது நாவில் உண்டு)

அதனால், இனிமேல் தேநீரின் சுவையை இனிப்பு உண்ட பின்னரும் உணர வேண்டுமானால், இனிப்பை உண்ட பின் ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து சிறிது நீர் அருந்திய பின்னர் தேநீர் அருந்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tea taste why changing after eat sweet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->