இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்., உங்களுக்கு தூக்கம் தானாகவே வரும்.! - Seithipunal
Seithipunal


இரவில் தூக்கம் வராமல் இருந்தாலே நாள் முழுக்க புத்துணர்ச்சி இல்லாமல் சோர்வாக இருக்கும். என்னென்ன உணவுப் பொருள்கள் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நன்றாக தூக்கம் வருவதற்காக சுரக்கக்கூடிய மெலட்டோனின் ஹார்மோன் திறன்பட செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

பாதாம் :

பாதாமில், ஒமேகா 3, மக்னீசியம், புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளதால் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

வால்நட் :

வால்நட் தூக்கத்தை பெறுவதற்கு ஒரு சிறந்த உணவாகும். இரவு உறங்கச் செல்லும் முன் இரண்டில் இருந்து ஐந்து வால்நட்களை சாப்பிடுவதன் மூலம் நல்ல தூக்கத்தை பெறலாம்.

தயிர் :

இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கப் தயிர் சாப்பிடுவதன் மூலம் நல்ல தூக்கம் கிடைக்கும்.

எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்கள் :

எண்ணெய்ச் சத்துக்கள் அதிகமாக உள்ள மத்தி, சால்மன் மற்றும் டூனா போன்ற மீன்களை சாப்பிடுவதன் மூலம் நல்ல உறக்கத்தை பெறலாம். இவற்றில் இருக்கின்ற ஒமேகா 3 மற்றும் புரதங்கள் மெலடோனின்  உற்பத்தியை அதிகரித்து நல்ல உறக்கம் பெற உதவும்.

கிவி பழம் :

கிவியில் செரோடோனின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இவை இரண்டும் உறங்குவதற்கு முன் சாப்பிடும் போது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

These Foods give sleep To You


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->