வெயில் தாங்காம இதை அடிக்கடி பன்றீங்களா.?! உஷார்.!
things to keep in mind while frequently eating curd
தயிர் கோடை காலத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த உணவாகும். இது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை கொடுப்பதோடு உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. தயிரில் விட்டமின் பி2, விட்டமின் பி12, பொட்டாசியம், மாங்கனிஸ், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. தயிர் ஆரோக்கியமான தகவல் இருந்தாலும் சில தவறுகளை தவிர்ப்பதன் மூலம் நம் உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
அதிக உடல் பருமன் கொண்டவர்கள் கபம் உடையவர்கள் மற்றும் அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் தயிரை தவிர்த்துக் கொள்வது நல்லது.
மோரின் செரிமானம் எளிதாகயிருக்கும் ஆனால் தயிர் செரிமானமாவதற்கு சிறிது காலம் எடுக்கும். இதனால் தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளாமலும் இரவில் தயிர் சாப்பிடாமலும் இருப்பது நல்லது.
தயிரில் கொழுப்பு சத்து அதிகம். இதனை அடிக்கடி உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரித்து நம் எலும்புகளின் அடர்த்தி குறையும். இதன் காரணமாக மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இரவில் தயிர் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் காரணமாக உடலில் சோர்வு ஏற்படும் மேலும் சளி தொந்தரவு இருக்கும் இவை காரணமாகும். ஆயுர்வேத தகவல்களின்படி தயிரில் இருக்கக்கூடிய இனிப்பு துவர்ப்பு பண்புகள் சளியை ஏற்படுத்தக் கூடியவை. இதனால் தயிர் இரவு நேரங்களில் தவிர்த்துக் கொள்வது நலம்.
பெயரை சூடு படுத்தி சாப்பிடக்கூடாது. மேலும் தயிர் கலந்த உணவு பொருட்களையும் சூடு படுத்தி சாப்பிடுவது நம் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஒன்றாகும். தயிரை சூடு படுத்தும் போது அதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆவியாகி விடுகின்றன. இது நல்ல உடலுக்கு எந்த மாதிரியான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கவில்லை.
English Summary
things to keep in mind while frequently eating curd