மாதவிடாய் தள்ளி போகிறதா? - அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்.!
tips of irregular periods
தற்போதைய காலத்தில் பல்வேறு உணவு பழக்க வழக்கங்களால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதற்காக பல இயற்கை மருத்துவத்தை செய்து வருகின்றனர். அந்த வகையில், மாதவிடாய் தள்ளிபோவதற்கு சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் காண்போம்.
* மூன்று கிராம் கொத்தமல்லியை 150 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் மாதவிடாய் நாட்கள் சீராகும்.
* சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
* பப்பாளியை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட்ரோஜின் ஹார்மோன் தூண்டபட்டு மாதவிடாய் ஏற்படும்.
* இஞ்சுடன் சிறிதளவு கொத்தமல்லித் தழை சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தினால் மாதவிடாய் ஏற்படும்.
* டீயில் தேன் கலந்து வெறும் வயிற்றில் மாதவிடாய்க்கு 3 நாட்களுக்கு முன்னரே குடித்து வந்தால் மாதவிடாய் ஏற்படும்.
* வெந்தையத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் மாதவிடாய் தள்ளிப் போவது நிற்கும். வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம்.
* கருப்பு எள், கருஞ்சீரகம் என்று இரண்டையும் உண்டு வந்தாலும் மாதவிடாய் தள்ளிப் போவதைத் தடுக்கலாம்.
English Summary
tips of irregular periods