சிறுநீரகத்தை பாதுகாக்கும் தக்காளியில் சூப்பரான தோசை.! ஹெல்தி ரெசிபி.!
tomato dosai recipe
தேவையான பொருள்கள் :
பச்சரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 8
உளுத்தம்பருப்பு - அரை உழக்கு,
தக்காளி - 5
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பருப்பையும், அரிசியையும் நன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் நன்றாக ஊறிய அரிசி மற்றும் உளுந்தம் பருப்புடன், சோம்பு, காய்ந்த மிளகாய், தக்காளி உள்ளிட்ட அனைத்தையும் போட்டு நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்.
மாவை அரைத்தபின் அதில் தேவையான அளவு உப்பு போட்டு கரைத்து வைத்துவிட வேண்டும்.
சுமார் 2 மணி நேரம் கழித்து அரைத்த மாவை எடுத்து, தோசைக்கல்லில் வார்த்து நல்லெண்ணெய்விட்டு பிரட்டி எடுத்தால் சூப்பரான தக்காளி தோசை ரெடி.!