அடிக்கிற வெயிலுக்கு சூப்பரா கேரளா பருப்பு பாயாசம் செஞ்சு பாருங்க... அசந்து போவீங்க...!
Try making this super Kerala dal payasam for scorching sun
கேரளா பருப்பு பாயசம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கடலைப்பருப்பு - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
பால் - 1 கப்
முந்திரி - 20
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :
அடுப்பில்,முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரையும் வரை நன்கு சூடேற்றி, பின் அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் குக்கரில் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 8 விசில் விட்டு இறக்கி விசில் போனவுடன் சற்று மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.கடைசியில் பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு பாயசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும், பின் முந்திரியைத் தூவினால், ஓணம் ஸ்பெஷலான கேரளா பருப்பு பாயசம் தயார்.
English Summary
Try making this super Kerala dal payasam for scorching sun