சத்தான சுவையான பீட்ரூட் ரசம் இப்படி செஞ்சு பாருங்க.! - Seithipunal
Seithipunal


உடலுக்கு தேவையான பல விதமான ஊட்டச்சத்துக்களை அடக்கிய பீட்ரூட்டில்  சுவையான ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட்  - 1  சிறியது 
புளி       - 1  டீஸ்பூன் 
ரசப்பொடி  - 1  டீஸ்பூன்  
பச்சை மிளகாய்  - 2
மஞ்சள் பொடி  - 1  சிட்டிகை 
உப்பு     -  தேவைக்கேற்ப 
வரமிளகாய்  - 4
கொத்தமல்லி  - 1  டீஸ்பூன் 
வெந்தயம்         - 1/2  டீஸ்பூன் 
சீரகம்                  - 1  டீஸ்பூன் 
கறிவேப்பிலை   - 5
தேங்காய் துருவல்  - 1/4  கப் 
கடுகு  -1/2  டீஸ்பூன் 
நறுக்கிய பூண்டு  - 2  டீஸ்பூன் 
பெருங்காயம்  - 1  சிட்டிகை
தேங்காய் எண்ணெய்  - 2  டேபிள்ஸ்பூன்

செய்முறை :

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை கடாயில் ஊற்றி வர மிளகாய், வெந்தயம், சீரகம், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுக்கவும். 

அவை வருத்து நன்றாக மனம் வந்ததும்  அதில் கால் கப் தேங்காய் துருவலை போட்டு நன்றாக வறுக்கவும்.

இவை அனைத்தும் நன்றாக வருப்பட்டு வாசம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொஞ்சம் சூடு ஆறியதும் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில்  வேகவைத்த பீட்ரூட் மற்றும் நாம் வறுத்து அரைத்த விழுது ஊற வைத்து புளி ஆகியவற்றை கலந்து மிதமாக கொதிக்க விடவும் இந்தக் கலவை ஒரு கொதி வந்ததும்  அடுப்பை அணைத்து விடவும்.

மற்றொரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வறுக்கவும் இவற்றுடன் கறிவேப்பிலை சேர்த்து  நன்றாக வதக்கி வாசம் வந்ததும் நாம் கொதிக்க வைத்த பீட்ரூட் மற்றும் விழுது கலவையை சேர்த்து  நன்றாக  கலக்கவும். 

இவற்றை கலந்த பின் நன்றாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்  சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் ரசம் ரெடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Try this Healthy beetroot rasam receipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->