நம் சருமத்திற்கு பேக்கிங் சோடாவை இனி அழகு சாதன பொருளாக பயன்படுத்த சில டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


சமையலுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங்  சோடாவை நாம் சில வீட்டு உபயோகத்திற்கும்  பயன்படுத்தலாம் என்பதை அறிவோம். ஆனால் இந்த பேக்கிங் சோடா ஒரு சிறந்த அழகு சாதன பொருளாகவும் பயன்படும் என்றால் நம்ப முடிகிறதா வாங்க பார்ப்போம் பேக்கிங் சோடாவை எப்படி அழகு சாதனத்திற்கு பயன்படுத்தலாம் என்று?

பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து மூன்று முதல் நான்கு நிமிடங்கள் ஊறவைத்து  பின்னர் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

பேக்கிங் சோடா  பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இவற்றை தண்ணீருடன் கலந்து  சருமம் எரிச்சலிருக்கும் இடங்களில் அப்ளை செய்து வர  எரிச்சல் நீங்குவதுடன் சருமம்  மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.

சூரிய ஒளியின் தாக்கத்தினால் நமது ஆடைகள் மறைக்காத இடங்களான கைகள் முகம் கழுத்து இவற்றில் நிறமாற்றம் ஏற்பட்டிருக்கும். இதனை ஸ்கின் டேன் என அழைக்கலாம். இந்த நிறமாற்றத்தை நம்மால் உணர முடியும். உடலின் மற்ற பகுதிகள் ஒரு நிறத்திலும் சூரிய ஒளியினால் நிறமாற்றம் ஏற்பட்ட இடங்கள் சிறிது கருமையாகவும் இருக்கும்  இதனைப் போக்க பேக்கிங் சோடா உடன் சிறிதளவு வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து  நிறம் மாறிய இடத்தில் அப்ளை செய்து வர நல்ல மாற்றம் கிடைக்கும்.

வெயிலில் அடிக்கடி சுற்றி திரிந்து  நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். இதனை சரி செய்வதற்கும் பேக்கிங் சோடா பயன்படுகிறது. இதற்குக் காரணம் பேக்கிங் சோடாவில் இருக்கும் குளிர்ச்சி தன்மையாகும். பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல செய்து  சருமம் பொலிவிழந்த இடங்களில்  அப்ளை செய்து வர சருமம் மீண்டும் அதன் பிரிவினை பெறும் .

நமது முகத்தில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ்  போக்குவதற்கு பேக்கிங் சோடா ஒரு சிறந்த கை வைத்தியம் ஆகும். சிலருக்கு மூக்கின் மேல் பகுதிகளில் அதிகமாக பிளாக்ஹெட்ஸ் இருக்கும் இவற்றை போக்குவதற்கு பேக்கிங் சோடா உடன் தண்ணீர் கலந்து அதனை பிளாக் ஹிட்ஸ் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து வர  பிளாக் ஹிட்ஸ் நீங்கி சருமம் பொலிவுடன் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Use baking soda as a beauty product like this


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->