இடுப்பு வலி பாடாய்படுத்துகிறதா.? இடுப்பு ஜவ்வு விலகலுக்கு அற்புதமான கை வைத்தியம்.! - Seithipunal
Seithipunal


இடுப்பு ஜவ்வு  விலகல் L4 L5 பிரச்சனை  இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி நீங்க  வீட்டிலேயே செய்யக் கூடிய அருமையான கை வைத்தியம் ஒன்றை பார்ப்போம்.

கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்துக் கொண்டு  அதை நன்றாக சுத்தம் செய்து காம்பை நீக்கி விட வேண்டும். அதில் இரண்டு சொட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டு வெற்றிலை முழுவதும் நன்றாக தடவிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு சிறிய உரலில் ஐந்து திப்பிலி, ஒரு நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். 

இவற்றுடன் மூன்று அல்லது நாலு பின்ச் வில்வ இலை பொடி சேர்த்து நன்றாக அரைத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு தூள் சேர்த்து நன்றாக விழுதூ போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பிரண்டை எடுத்து அதில்  ஐந்து சொட்டு ஆமணக்கு எண்ணெய் ஊற்றி நல்லெண்ணெய் விளக்கில் அதனை ஒரு ஐந்து நிமிடத்திற்கு வாட்டி எடுக்க வேண்டும். பிறகு நாம் அரைத்து வைத்த விழுதை எடுத்து  வெற்றிலையில் வைத்து பிரண்டையைப் பிழிந்து அதன் சாறை விழுதின் மேல் ஊற்றி வெற்றிலையை மடித்து சாப்பிட வேண்டும். 

வெறும் வயிற்றில் 15 நாட்கள் இதை சாப்பிட்டு வர இடுப்பு ஜவ்வு விலகல் இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி போன்ற அனைத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Use these tips to get instant relief from painful hip flexors and pelvic pain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->