இந்த விஷயத்த சாப்பிடும் போது செஞ்சீங்க அப்புறம் அவ்வளவுதான்.! உஷார் தகவல்.! - Seithipunal
Seithipunal


இன்று பெரும்பாலானவர்களின்  டைனிங் டேபிள் என்பது டிவிக்கு முன்பிருக்கும் சோபாவாக மாறிவிட்டது. டிவி அல்லது செல்போனை பார்த்து கொண்டு சாப்பிடும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இன்று ஒரு வியாதியாக வந்திருக்கிறது. இந்த பழக்கத்தினால் நம் உடலுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

சாப்பிடும் போது சாப்பாட்டில் முழு கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும் அப்படி இல்லாமல் டிவியை பார்த்துக் கொண்டே சாப்பிடும் போது நாம் நமது தேவைக்கு அதிகமான உணவை சாப்பிட்டு விடுவோம். இதன் காரணமாக  உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

உணவை சாப்பிடும் போது அதை பற்களின் மூலம் நன்றாக அரைத்து சாப்பிட முடியும். அவ்வாறு சாப்பிட்டால் தான் உணவு நன்றாக செரிமானமாகும். இல்லையென்றால் உடலுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன

டிவியை பார்த்துக் கொண்டு அல்லது செல்போன்களை பார்த்துக் கொண்டு சாப்பிடும் போது கவனச்சிதறல் ஏற்படுகிறது. இதன் காரணமாக நமது மூளை  அதிக பசியை நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும்.

இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போது நமது மூளையின் கவனம் ஒரு செயலின் மீது தான் இருக்கும். இதனால் டிவி பார்த்துக் கொண்டே உணவை சாப்பிடும் போது நமக்கு இரண்டிலும் கவனமில்லாத தன்மை ஏற்படலாம்.

உறவினர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் நாம் அவர்களுடன் பேசாமல் மொபைல் அல்லது டிவியை பார்த்துக் கொண்டே சாப்பிடும் போது உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் டிவியை பார்த்துக் கொண்டே உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Watching tv while eating food is dangerous to health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->