கோடை காலத்தில் அதிகமாக தலை முடி உதிர்வை தடுக்க சில ஹேர் கேர் டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு  நமது சருமம் மற்றும் கூந்தல் போன்றவையும்  கோடை வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. முடி உதிர்வது எல்லா காலங்களிலும் பிரச்சனையாக இருந்தாலும் கோடை காலத்தில்  வெயிலின் காரணமாக உலர்ந்து அதிகமாக உதிரும் இந்தப் பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்று பார்ப்போம்.

நம் தலையில் முடி உதிர்வதை தடுக்க  குளிப்பதற்கு முன்னர் வாரம் இரண்டு முறை தேங்காய் எண்ணெய் சேர்த்து  நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் எண்ணெய் காரணமாக கூந்தலின் வேருக்கு நல்ல ஊட்டம் கிடைக்க உதவுகிறது. இதன் மூலம் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி  நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்தலாம். இந்த பொருள்கள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதோடு உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வைக்கின்றன. இதைப்போல இவை தலையிலிருக்கும் கூந்தலின் வேர்களை   உறுதியாக்குவதோடு கூந்தல் விரைவில் உடைந்து விடுவதையும் தடுக்கிறது.

உலர் பழமான பாதாம் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் தலை முடி உதிர்வதை தடுக்கலாம். இவற்றில் இருக்கக்கூடிய அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3  ஆகியவை நம் கூந்தல் உதிர்வதை தடுக்க உதவுகிறது.

நீர் சத்துக்கள் நிறைந்த தர்பூசணி,  வெள்ளரிக்காய் போன்றவற்றை எடுத்து வர உடலானது நீர் ஏற்றத்துடன் இருக்கும் இதன் காரணமாக கூந்தல் உலர்ந்து  முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது.

கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலமும் அந்த ஜெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடித்து வருவதன் மூலமும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு முடி உதிர்வதையும் தடுக்கலாம். மேலும் இவை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ways to prevent excessive hair fall during summer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->