நீரிழிவு நோயாளிகள் ஏன் பரோட்டாவை தவிர்க்க வேண்டும்? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
why diabetic patients should avoid parotta here is the reason
பரோட்டாவிற்கு மயங்காத மனமே இல்லை என்று சொல்லலாம். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் பரோட்டாவிற்கு மவுசு அதிகம். விதவிதமாக தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் ரோட்டோர கடைகளில் இருந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை மக்களுக்கு விருப்பமான உணவுகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
பொதுவாக பரோட்டா மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது கோதுமையின் தவிடு நீக்கப்பட்டு அதன் விதை கூழ் தசைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒன்றாகும். பொதுவாக தவிட்டில் தான் தனிமங்கள் மற்றும் சத்துப் பொருள்கள் இருக்கும்.
விதைக்கூழ் தசையில் மாவுச்சத்து மட்டும்தான் அதிகமாக இருக்கும். ஒரு கப் மைதாவை எடுத்துக் கொண்டால் இதில் 107 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. மேலும் இதன் கலோரி அளவு 496. மேலும் மைதாவில் இருக்கும் கிளைசெமிக் அளவு 71. இதன் காரணமாக மைதாவை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து விடும்.
இவை எளிதில் ஜீரணமாகாது. இதன் காரணமாக வயிற்றுக் கோளாறுகள் மற்றும் அமிலத்தன்மையையும் அதிகரிக்கும். மைதா மாவின் மென்மை தன்மையே அதிகரிப்பதற்காக அதில் அலோக்சான் மற்றும் பென்சைல் பெராக்சைடு போன்ற நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருட்களும் கலக்கப்படுகின்றன. இவை உடலுக்கு மிகவும் தீமையை விடுவிக்க கூடியது.
மைதாவில் மாவுச்சத்தை தவிர வேறு எந்த வைட்டமின்களோ கனிம சத்துக்களோ இல்லை. இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பரோட்டாவை சாப்பிடுவதன் மூலம் நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு பல்வேறு விதமான உடல் உபாதைகளையும் ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் பரோட்டாவை தவிர்த்துக் கொள்வது நல்லது.
English Summary
why diabetic patients should avoid parotta here is the reason