6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்தால் இவ்வளவு ஆபத்தா.?!
Why shouldnt water be given to newborns up to six months
நீரில்லாமல் வாழ முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது. ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தண்ணீர் தேவைப்படுவதில்லை என்பது உண்மை. மேலும் குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதம் வரை தண்ணீர் கொடுக்கக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போதுமானது. அதிலேயே குழந்தைகளுக்கு தேவையான நீர் சத்தும் இருக்கிறது எனவே குழந்தைகளுக்கு தண்ணீர் தேவைப்படாது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் போது தண்ணீரானது தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்களை உறிஞ்ச விடாமல் செய்துவிடும். மேலும் தண்ணீர் குழந்தைகளின் வயிற்றை அடைத்து விடுவதால் குழந்தைகளால் அதிகமான தாய்ப்பாலை குடிக்க முடியாது இதனால் குழந்தைகளுக்கு தண்ணீர் தேவை இல்லை.
பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை மட்டுமே கொடுக்க வேண்டும் தண்ணீரில் ஊட்டச்சத்துக்கள் கிடையாது. மேலும் தாய்ப்பாலில் ஏராளமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதன் காரணமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது தண்ணீர் தேவையில்லை.
பிறந்த குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடைந்து இருக்காது அது போன்ற நேரங்களில் சக்தி இல்லாத தண்ணீர் கொடுக்கும் போது சிறுநீரகம் போன்ற உறுப்புகளை செயலிழக்க செய்து விடும். மேலும் செரிமான குறைபாட்டையும் ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது.
பிறந்த குழந்தைகளின் வயிற்றில் 5 முதல் 10 மில்லி லிட்டர் அளவிற்கு உணவிற்கு இடமிருக்கும் அதில் சக்தி இல்லாத தண்ணீரைக் கொண்டு நிரப்பும்போது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். இது போன்ற காரணங்களால் தான் குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தண்ணீர் கொடுக்க தேவையில்லை.
English Summary
Why shouldnt water be given to newborns up to six months