தினமும் வெறும் வயிற்றில் ஏன் வெந்நீர் குடிக்க வேண்டும் தெரியுமா.?!
why we must drink hot water every day
மழை பெய்யும்போது மட்டும் கொசுக்கள் வருவதில்லை ஏன்?
கொசுக்கள் நீரில் நனைந்தால் அவைகளால் இறக்கைகளை அசைக்க முடியாது. பொதுவாகவே மழை பெய்யும்போது இக்காரணத்தால் பல பூச்சி இனங்களால் பறக்க முடியாது. மழை நின்ற பின்பு தான் பறக்கும்.
தினமும் வெறும் வயிற்றில் ஏன் வெந்நீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
பொதுவாக நமக்கு உடல்நிலை சரியாக இல்லை என்றால் தான் வெந்நீர் குடிப்போம். ஆனால் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை இருக்கின்றது என்று தெரியுமா? பொதுவாக வெந்நீர் குடிக்கும்போது நம் உடல் லேசாக வியர்க்கும். அவ்வாறு வியர்க்கும்போது நம் உடலில் இருக்கும் தேவையற்ற உப்பு நீரை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
இரவு நேரங்களில் :
சிலருக்கு இரவு நேரங்களில் புளித்த ஏப்பம், வாய்வு பிடிப்பு பிரச்சனைகள் இருக்கும் அப்போது வெந்நீர் குடித்தால் இந்த பிரச்சனை சரியாகும். மேலும் உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.
முடி வளர்ச்சிக்கு :
தினமும் அதிகளவு வெந்நீர் குடிப்பதினால் முடி வேர்பகுதிகளுக்கு வலிமையளித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
இரத்த ஓட்டம் சீராக :
தினமும் அதிகளவு வெந்நீர் குடிப்பதினால் இரத்த குழாய்கள் விரிவடையும். இதனால் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது. மேலும் செல்களுக்கு ஊட்டச்சத்து, ஆக்சிஜன் ஆகியவை சரியாக கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக செயல்படும்.
மேலும் தினமும் வெந்நீர் குடிப்பதினால் நரம்புமண்டலங்களின் செயல்பாடுகள் சீராக இருக்கும். குறிப்பாக நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் நமக்கு வயதான தோற்றங்களும் ஏற்படாது.
உடல் எடையை குறைக்க :
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீருடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து குடித்து வந்தால் மிக விரைவில் உடல் எடையை குறைத்துவிட முடியும்.
நெஞ்சு கரைசல் சரியாக :
சில நேரங்களில் நாம் எண்ணெய் தின்பண்டங்களை அதிகளவு சாப்பிட்டு விடுவோம். அதன் காரணமாக நெஞ்சு கரைசல் ஏற்படும். அப்போது தாராளமாக இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்துவிட்டால் உடனடியாக நெஞ்சு கரைசல் சரியாகிவிடும்.
மேலும் பல நன்மைகள் :
தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். உயர் இரத்த அழுத்தம் குறையும். மன அழுத்தம் குறையும். சிறுநீரக சம்பந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாது. சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை ஆகியவை வலிமை பெரும்.
குளிர்காலங்களில் அதிகமாக சளி, இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அப்போது நாம் அதிகளவு வெந்நீர் அருந்தி வந்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும்.
English Summary
why we must drink hot water every day