பல கோடி சம்பளத்துடன் பதவி உயர்வு; ஆனால், மனைவி விவாகரத்து; காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக பதவி உயர்வு பெற்ற தொழில்நுட்ப ஊழியரை, அவரது மனைவி விவாகரத்து செய்துள்ள சம்பவம் குறித்து இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Blind என்ற சமூக ஊடக தளத்தில் பெயர் குறிப்பிடாத அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது. அதில் அந்த நபர் மூன்று ஆண்டுகளாக, மிகவும் கடினமாக உழைத்ததாகவும், சில நேரங்களில் ஒருநாளைக்கு 14 மணி நேரம் கூட உழைத்து, சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்படி வேலையில் மும்முரமாக ஈடுபட்டதால் குடும்ப நிகழ்வுகளில் அவர் தவறவிட்ட சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர்,  பதவி உயர்வு ஆசை, தனது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்தது என்று பகிர்ந்துள்ளார்.

அத்துடன், எவ்வளவு பணம் இருந்தும், தற்போது தான் பெற்ற பதவி உயர்வு குறித்து வெறுமையாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் தனது பதிவில் அவர் கூறியுள்ளதாவது; 03 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கு பதவி உயர்வுக்காக அதிக எண்ணிக்கையிலான பணிகளை அங்கு செய்து வந்தேன்.

ஐரோப்பா - ஆசியா குழுவை ஒருங்கிணைக்கும் அளவுக்கு உயர்ந்தேன். அதனால் தனது மீட்டிங்- கள் காலை 07 மணிக்கு தொடங்கி இரவு 09 மணிக்கு முடிவடைகின்றன என குறிப்பிட்ட அவர், என் மகள் பிறந்த நாளில், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் நான் மீட்டிங்ளில் இருந்தேன். 

என் மனைவிக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கும் போது, மீட்டிங்கில் இருந்தேன். இந்த பிரச்சனையால் அவளை உடனிருந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அவள் விவாகரத்து கேட்டாள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இன்று தனக்கு பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது என்ற நல்ல செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் வெறுமையாகவும்,  அலட்சியமாகவும் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், என் வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இந்த குழப்பமான காலத்தில், என்னிடம் உள்ளதைப் பற்றி நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இல்லையா? ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? என்று தனது வேதனையும் மனைவியின் பிரிவையும் அந்த தளத்தில் பதிவாக பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife seeks divorce from man was promoted with multi crore salary


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->