உங்க வீட்டில் பித்தளை பாத்திரங்கள் இருக்கா..? அவை பளிச்சென்று மின்ன 'இந்த' 6 பொருள் போதும்..!!
You can Clean The Brass Items With These 6 Things
பித்தளை பூஜை பொருட்களை சுத்தம் செய்வதென்பது மிகப் பெரும் சவாலான ஒரு விஷயம். ஆனால் எளிய முறையில் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே பளிச்சென்று அவற்றை மின்ன வைப்பது எப்படி என்று இங்கு காண்போம்.
1. எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா : இவை இரண்டையும் பேஸ்ட் போல் கலந்து பித்தளை பொருட்களின் மேல் தடவி, நன்கு அழுத்தி துடைத்தாலே போதும். அதன் பின் பாத்திரம் விளக்கும் சோப்பு கொண்டு ஒரு முறை கழுவலாம்,
2. பீதாம்பரி : இது பூஜை சாமான் விற்கும் கடைகளிலேயே எளிதாக கிடைக்கும். இது பித்தளையில் உள்ள எண்ணெய்ப் பசை, மற்றும் அதன் மங்கிய நிறத்தை போக்கி பளிச்சென்று வைக்க உதவுகிறது.
3. டூத் பேஸ்ட் : நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்டை தனியாகவோ அல்லது பீதாம்பரியுடன் கலந்தோ பித்தளை பாத்திரத்தை தேய்க்கலாம். இதற்கு முதலில் பாத்திரத்தை நாம் எப்போதும் உபயோகப்படுத்தும் சோப்பு கொண்டு கழுவி விட்டு, பின்னர் இந்த பேஸ்டை தடவி, பின்னர் ஒரு துணி கொண்டு துடைத்தால் போதும்.
4. வினிகர் மற்றும் கடலைமாவு : இவை இரண்டையும் கலந்து பாத்திரங்களின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து துணியைக் கொண்டு துடைத்து விட்டு, பின்னர் வழக்கம் போல கழுவி வைத்தால் பித்தளை பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும்.
5. கெட்சப் : சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் கெட்சப்களை பித்தளை பொருட்களின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து சூடான துணியினால் துடைத்து விட்டு, பின்னர் வழக்கம் போல பவுடர் கொண்டு தேய்த்து கழுவி வைக்கலாம்.
6. புளிக்கரைசல் : நம் சமையலறையில் எப்போதும் இருக்கும் புளியை தண்ணீரில் கரைத்து பித்தளை பாத்திரங்களை அந்த கரைசலில் ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி வைத்தால் போதும்.
இவை எல்லாவற்றிலும் முக்கியமானதாக இருப்பது, பித்தளை பாத்திரங்களை கழுவி துடைத்து வெயிலில் காய வைத்து எடுத்தால், பளிச்சென்று மின்னும்.
English Summary
You can Clean The Brass Items With These 6 Things