I.N.D.I.A கூட்டணி || 13 பேர் கொண்ட கமிட்டி! மு.க ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு! சூடு பிடிக்கும் தேர்தல் களம்! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடுத்த கட்டமாக மாதம்தோறும் கூட்டம் நடத்துவது சிரமமான காரியம் என்பதால் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி உருவாக்குவது எனவிவாதிக்கப்பட்டு முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் 63 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்காக 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சேர்ந்த கே.சி வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராபர்ட், பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா அடங்கிய 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக தொகுதி பங்கீடு, பிரச்சாரம் மேற்கொள்வது, தேர்தல் வியூகங்கள், மாநிலம் வாரியாக குழு அமைப்பது போன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துச் செல்லும் என தெரிய வருகிறது. மேலும் இந்தியா கூட்டணியின் இலட்சினை இன்று மாலை வெளியிடப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் காலம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13member coordination committee formed in India alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->