2024 நாடாளுமன்ற தேர்தல்.. பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்- அமித் ஷா.! - Seithipunal
Seithipunal


2024 தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது, நாட்டு மக்களுக்கு பாஜக தலைவர்களின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, சுயநலமற்ற சேவையால் பாஜகவின் வெற்றிப்பயணம் தொடரும். 

இந்திய அரசியலை அழிக்கும் 3 இலக்குகளை மோடி குறிவைத்துள்ளார். அது என்னவென்றால், குடும்ப அரசியல், சமரசம், ஊழல் ஆகியவைகளை ஒழிப்பதே முதல் குறிக்கோளாகும்.

பிரதமர் மோடியின் தலைமையில் மத்தியில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் பாஜக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2024 Parliament election BJP rule again


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->