2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை - உள்துறை அமைச்சர் அமித்ஷா.! - Seithipunal
Seithipunal


2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏஎன்ஐ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என நான் நம்புகிறேன். பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

பொதுமக்கள் தற்போது குடும்ப கட்சிகளின் ஆட்சியில் இருந்து பாஜகவின் வளர்ச்சி அரசியலை ஏற்று கொண்டு வருகின்றனர். மேலும் கர்நாடகாவில் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

கடந்த 2 மாதங்களில் நான் 5 முறை கர்நாடகாவிற்கு சென்றுள்ளேன். கர்நாடகாவில் உள்ள மக்கள் பிரதமர் மோடியின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே கர்நாடகாவில் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். மேலும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2024 parliamentary election no one competitive party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->