2026 -ஆம் சட்டமன்ற தேர்தல்; திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்கிறார் மு.க. ஸ்டாலின்..!
2026 Assembly Elections DMK alliance is sure to win says MK Stalin
கோவை கொடிசியா அரங்கத்தில் வள்ளி கும்மி நடனம் மூலம் கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற 16,000 பெண்களுக்கு வாழ்த்துகள். வள்ளிக்கும்மி விழாவில் 16,000 பெண்கள் பங்கேற்றது என்பது மிகப்பெரிய சாதனை. 2026 சட்டமன்ற தேர்தலி்ல திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மேற்கு மண்டல வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன், தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தொகுதி மறுவரையறை மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 40-க்கு 40 வெற்றி என்பது மக்கள் நமது திராவிட மாடல் ஆட்சிக்கு கொடுத்த அங்கீகாரம். நமக்கு நிதியை முறையாக வழங்கும் மத்திய அரசு இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை படைப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
2026 Assembly Elections DMK alliance is sure to win says MK Stalin