திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட 31 பேர் சஸ்பெண்ட்.!! - Seithipunal
Seithipunal


திமுக எம்பிக்கள் டி.ஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், சுமதி உள்ளிட்டோர் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்  தொடர்பு முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி மக்களவை தலைவர் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதேபோன்று காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் வசந்த், திருநாவுக்கரசு, அதிரஞ்சன் சவுத்ரி, கௌரவகோபால் உள்ளிட்டோரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கலாநிதி வீராசாமி, எஸ்.எஸ் பழனி மாணிக்கம், நவாஸ் கனி உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவை இன்று காலை கூடியது முதல் நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமலில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 3 முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அப்போதே எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவை தலைவர் எச்சரித்திருந்த நிலையில் மீண்டும் அவை பிற்பகல் 3 மணிக்கு கூடியது. அப்போது அமலியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை குறித்து கொள்ளுமாறு அவைத்தலைவர் ராஜேந்திர அகர்வால் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நாடாளுமன்ற விதிகளை மீறியதாகவும், நாடாளுமன்றத்திற்குள் பதாகைகளை ஏந்தியதாகவும் கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்பிக்கள் மற்றும் விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும்  31 எம்பிக்கள் நடப்பு கூட்ட தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 MPs including TR Balu Rasa suspended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->