4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்! வெளியாக போகும் அதிகாரபூர்வ அறிவிப்பு!
4 state Election 2024
தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்றார். மேலும், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு காங்கிரஸ் போட்டியாக இருந்த நிலையில், தற்போது நடக்க இருக்கும் நான்கு மாநில சட்டசபை தேர்தலிலும் பாஜகவிற்கு கடும் போட்டியாக காங்கிரஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சட்டசபையின் பதவிக்காலம் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட்டில் நவம்பர் 23 மற்றும் ஜனவரி 5-ல் முடிவடைகிறது.
தற்போது இந்த நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகளும் தொடங்க இருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வருகின்ற 25-ம் தேதி தொடங்கப்பட்டு இறுதி பட்டியல் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வமான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.