#JUSTIN : 5 மாநில சட்டமன்றத் தேர்தல் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் குறித்து இன்று ஆலோசனை- இந்திய தேர்தல் ஆணையம்.!
5 State assembly elections discuss relaxation
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியின் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப், கோவா உட்பட 5 மாநில தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.
மேலும், நோய் தொற்று பரவாத வகையில் இந்த தேர்தலை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் முதல் நோக்கமாகும். கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர், மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் 5 மாநில கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
English Summary
5 State assembly elections discuss relaxation