5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிலவரம்..4 மாநிலங்களில் பாஜக முன்னிலை.. தற்போதைய நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி,

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 60 இடங்களிலும், சமாஜ்வாதி 28 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 64 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

40 தொகுதிகளை கொண்ட கோவாவில் பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சியை 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

60 தொகுதிகளில் கொண்ட மணிப்பூரில் பாஜக 6 இடங்களிலும், ஜனதா தளம் 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 State assembly elections results


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->