நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 62 பதவியிடங்களுக்கு இன்று மறைமுக தேர்தல்.!!
62 post indirect election
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 21 மாநகராட்சிகளிலும் திமுக தன் வசமாக்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சி களில் திமுக வேட்பாளர்கள் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஒரு மாநகராட்சி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு விடுபட்டுள்ள 62 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் தொடங்குகிறது.
English Summary
62 post indirect election