பா. ரஞ்சித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் "சின்ன மயிலு" ஜான்வி கபூர்..! - Seithipunal
Seithipunal


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து 'ரூஹி', 'குட் லக் ஜெர்ரி', 'மிலி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்த்துள்ளார்.

அத்துடன், கடந்த ஆண்டு வெளியான 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். தர்போது ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். அதாவது, பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார். 'களவாணி' திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழ் சினிமா வட்டாரங்களில் தகவல்கள்  வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Janvi Kapoor to make Tamil debut with Pa Ranjith film


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->