அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு!
CBI Case file against ADMK Rajendra Balaji
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக புகார் எழுந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், இது போதுமானதா என உயர்நீதிமன்றம் பரிசீலனை மேற்கொண்டது.
பின்னர், வழக்கின் தன்மை மற்றும் அதன் பரிமாணங்களை கருத்தில் கொண்டு, இதற்கான மேலதிக விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் வழக்கை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன் படி இன்று ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
English Summary
CBI Case file against ADMK Rajendra Balaji