திமுகவில் தன் மகன் உதயநிதியின் வளர்ச்சிக்காக சகோதரி "கனிமொழி"யை வெறுக்கிறாரா CM ஸ்டாலின்? பாஜக ஹெச்.ராஜா போட்ட குண்டு!
BJP H Raja Condemn to DMK and STalin Family Politics
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரன் கலாநிதிமாறன் ஆதாயத்திற்காக அனைத்து மொழிகளிலும் டிவி சேனல் நடத்தலாம்?
திமுகவின் முன்னணி தலைவர்களின் குடும்ப வாரிசுகள் தமிழகம் முழுவதும் மும்மொழி பாடத்திட்டத்தில் CBSE பள்ளிகள் நடத்தலாம்? ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவு வளர்சிக்காக மும்மொழிகளில் பாடம் மட்டும் நடத்தக்கூடாதா?
திமுகவில் தன் மகன் உதயநிதியின் வளர்ச்சிக்காக சகோதரி "கனிமொழி"யை வெறுப்பதும்..!! தன் ஆட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காக இருமொழி ஆதரவு என்கிற பெயரில் "ஹிந்தி மொழி"யை எதிர்ப்பதும்..!!
இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் "உருது மொழி" யை ஆதரிப்பதும்..!!
தலைநகர் சென்னையில் மாநகராட்சி பள்ளிகளில் சத்தமில்லாமல் "பிரெஞ்ச் மொழி" யை அனுமதிப்பதும்..!!
அப்பப்பா!! ஒரு குடும்பம் மொழியை வைத்து அரசியல் நடத்த எத்தனை எத்தனை நாடகம்?
ஒரு குடும்பம் வாழ அவர்கள் நடத்தும் மொழி நாடக அரசியலுக்கு எத்தனை காலம் தான் ஏமாறப் போகிறதோ இந்த தமிழகம்? திருப்பரங்குன்றம் முத்தமிழ் முருகா..!! தமிழையும், தமிழகத்தையும் இந்த திராவிட மாடல் கும்பலிடம் இருந்து காப்பாற்று!! என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP H Raja Condemn to DMK and STalin Family Politics