N.D.A vs I.N.D.I.A || நாடே எதிர்பார்க்கும் மக்களின் தீர்ப்பு! 8 மணிக்கு கவுன்டிங் தொடங்கியது! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. அதன்படி ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதி, திரிபுரா மாநிலம் போக்ஸாநகர் மற்றும் தான்பூர் தொகுதிகள், உத்தர பிரதேச மாநிலம் கோஷி, உத்தரகண்ட் மாநிலம் பாகேஸ்வர், கேரள மாநிலம் புதுப்பள்ளி, மேற்குவங்க மாநிலம் துக்புரி ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டன.

இந்த வாக்குப்பதிவின்போது கேரளா மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் 71% வாக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியில் 64% வாக்குகளும், திரிபுரா மாநிலம் போக்ஸாநகர் பகுதியில் 87% வாக்குகளும், தான்பூர் தொகுதியில் 82% வாக்குகளும், உத்தரபிரதேசம் மாநிலம் கோஷி தொகுதியில் 50% வாக்குகளும், உத்திராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியில் 56% வாக்குகளும், மேற்குவங்க மாநிலம் துக்புரி தொகுதியில்75% வாக்குகளும் பதிவாகி இருந்தது.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. சற்று முன்ன தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று உடனுக்குடன் முன்னிலை நிலவரம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு முதல் தேர்தல் நடைபெறுவதால் நாடு முழுவதும் இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்களின் முடிவின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 constituencies byelections counting vote has begun


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->