சென்னையில் இன்று 75-ம் ஆண்டு பவள விழா, திமுக முப்பெரும் விழா!...மின் விளக்குகளால் ஜொலிக்கும் அண்ணா அறிவாலயம்! - Seithipunal
Seithipunal


திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் பவள விழா மற்றும் திமுக ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழா ஆகியவை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், திமுக முப்பெரும் விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கும் நிலையில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றுகிறார். 


தொடர்ந்து இயற்கை விவசாயியான 108 வயது மூதாட்டி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது, திமுக மூத்த உறுப்பினரான அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அண்ணா விருது, முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருது, திமுக தீர்மானக் குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருது மு.க.ஸ்டாலின் விருதை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். பின்னர் பவள விழா மலரும் வெளியிடப்பட உள்ளது.

இதற்கிடையே முப்பெரும் விழாவையொட்டியும், திமுகவின் பவளவிழாவை ஒட்டியும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அண்ணா அறிவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது. மேலும் அறிவாலயத்திற்கு உள்ளே அண்ணா மற்றும் கலைஞரின் திருவுருவச் சிலைகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
==========


 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75th Coral Festival Triennial Celebration in Chennai today Anna Institute is shining with electric lights


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->