7ம் கட்ட வாக்குப்பதிவு : மேற்குவங்கத்தில் வெடித்த வன்முறை!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை 7 கட்டங்களாக நடைபெற்று வரும்நிலையில் , இன்று மக்களவை தேர்தலுக்கான  இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடக்கி நடைபெற்று வரும்நிலையில், மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கி நடைபெற்று வந்தநிலையில், இன்று மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வந்தநிலையில், மேற்கு வங்கத்தின் குட்டாலி மற்றும் தெற்கு 24 பார்க்கானஸ் தொகுதிகளுக்கு உட்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பெட்டிகளை தூக்கிச்சென்று அருகில் உள்ள குளத்தில் வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலையை வாக்குச்சாவடி ஏஜென்ட்களை வாக்குச்சாவடி மையத்தகில் இருக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் இந்த வன்முறை சம்பவம் நடந்தாக கூறப்படுகிறது. வாக்குச்சாவடியில் இருவேறு கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தி கலவரகாரர்களை விரட்டி அடித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7th phase polling Violence broke out in West Bengal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->