மரணத்தை நோக்கி தள்ளப்படும் முதல்வர்.. பகீர் கிளம்பிய ஆம் ஆத்மி.!! அதிரும் டெல்லி - Seithipunal
Seithipunal


மதுபான கொள்கை முறிக்கீடு வழக்கு தொடர்பாக அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சர்க்கரை நோயாளி என்பதால் வீட்டில் சமைக்கப்படும் உணவு அவருக்காக திகார் சிறைக்கு அனுப்பி வைக்கப்படும். 

அவரின் சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இருப்பதால் தினமும் 15 நிமிடம் மருத்துவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனை எதிர்த்த அமலாக்கத்துறை தரப்பு தனது சர்க்கரை அளவை உயர்த்துவதற்காகவே மாம்பழங்கள், சர்க்கரை கலந்த டீ போன்றவற்றை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துக் கொள்வதாக கூறியதோடு உடல்நிலை பிரச்சினைகளை காரணம் காட்டி ஜாமின் பெறவும் திட்டமிடுவதாக குற்றம் சாட்டியது. 

அதற்கு அரவிந்த் எதிர்பால் தரப்பு இதுவரை அனுப்பப்பட்ட உணவுகளில் மூன்று முறை மட்டுமே மாம்பழம் அனுப்பியுள்ளதாகவும், சர்க்கரை இல்லா டீயை மட்டுமே அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துக் கொள்வதாகவும் விளக்கமளித்திருந்தது. 

உடல் நிலை பாதிப்பு ஏற்படுத்தி ஜாமீன் பெற யாராவது முயல்வார்களா என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு அமலாக்க துறையை சாடியது. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவருக்கு தினசரி வழங்கப்படும் இன்சுலின் இதனால் வரை வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு இதன் காரணமாகவே அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கு நாளை டெல்லி உயர் நதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மெல்ல மெல்ல மரணத்தை நோக்கி தள்ளப்படுகிறார் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு இன்சுலின் மறுக்கப்படுகிறது ஏன் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அவருக்கான மருத்துவ உதவி மறுப்பதால் மரணத்தை நோக்கி தள்ளப்படுகிறார்" என ஆம் ஆத்மி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAP accused aravind kejriwal going to towards death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->