திமுக அறிவிப்பின் அதிரடி எதிரொலி!...தமிழகம் முழுவதும் இன்று அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்!
Action echo of dmk announcement aiadmk human chain protest across tamil nadu today
சமீபத்தில் சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சொத்துவரி உயர்வுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் தங்களது கண்டங்கனங்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு கடந்த 40 மாதகால ஆட்சியில், மூன்று முறை மின்கட்டண உயர்வுடன் இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் மொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழக மக்களின் வாழ்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறு உள்ளது.
English Summary
Action echo of dmk announcement aiadmk human chain protest across tamil nadu today