ஜாமீனில் வெளியே வந்த தாடி பாலாஜியின் மனைவி பாஜகவில் தஞ்சம்...!! - Seithipunal
Seithipunal


 சென்னை அடுத்த மாதவரம் சாஸ்திரி நகரில் காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தனது மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு நித்யா எதிர் வீட்டு உரிமையாளரின் காரை கல்லால் அடித்து சேதப்படுத்தியதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த நித்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தனியாக வாழும் பெண்கள் குறித்து நிறைய கேள்விகள் எழுகின்றன. 

நாங்கள் எல்லாம் நேர்மையான முறையில் சம்பாதிக்க மாட்டோமா..? தவறான முறையில் தான் சம்பாதிப்போமா..? அதனால் தான் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெண்கள் பாதுகாப்புக்காக அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணையப் போகிறேன்.

நான் நாட்டுக்காக சேவையாற்றவும் பெண்களுக்காக போராடவும் பாஜகவில் இணைய உள்ளேன். ஐபிஎஸ் பதவியை உதறித் தள்ளிய அண்ணாமலை போல் பெண்கள் முன்னேற்றத்திற்காக நானும் குரல் கொடுப்பேன். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழிசை சௌந்தர்ராஜன் இவர்களெல்லாம் எனக்கு உத்வேகமாக இருந்துள்ளனர். எனவே பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாஜகவில் இணைய உள்ளேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். நித்யா பாஜகவில் இணைத்தால் நடிகை காயத்ரி ரகுராமன் வகித்த பதவி இவருக்கு வழங்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Balaji wife Nithya to joining in TN BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->