வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 1078 ஓட்டு!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வரும் நிலையில், வேலு நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை யாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போதைய நிலவரம் படி  1078 வாக்குகள் வாங்கியுள்ளார்.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல்   மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.

மக்களவை தேர்தலில் நடிகர் மன்சூர் அலி தான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். பலா பழ சின்னம் ஒதுக்கப்பட்டது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டக்கொண்டிருந்தபோது மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வேலு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 1078 வாக்குகள் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Mansoor Alikhan who contested in Vellore constituency got 1078 votes


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->