என்னை பார்த்து சங்கி என்று சொல்கிறார்கள்., நடிகர் விஜய் வசனத்தால் சர்ச்சை.! ஒட்டப்பட்ட போஸ்டர்.!  - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 27-ந் தேதி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம்,

"பட்டிமன்றம் சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கலாம், தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கக்கூடாதா? இந்து கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என்று சொல்கிறார்கள். இதனால் எனக்கு கவலை இல்லை. 

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிகர் விஜய் இந்து கடவுளை அவமரியாதை செய்து வசனம் பேசியுள்ளார். ஆகவே, இந்து கடவுளை அவமரியாதை செய்யும் நடிகர் விஜய் படத்தை யாரும் பார்க்காதீர்கள்" என்று பேசினார். 

இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து மதுரை ஆதீனம் பேச்சுக்கு மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து, மதுரை முழுவதும் மதுரை ஆதீனத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், "மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடும் நீங்கள், தளபதி விஜயை பத்தி பேசலாமா தப்பா? எங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay movie dialogue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->