பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் காங்கிரசில் இணைந்த பிரபல நடிகை.!
actor vijaya santhi joined congress party
சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அந்தக் கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைத்து விட்டு காங்கிரஸில் சேர்ந்தார்.
இதையடுத்து கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர் அக்கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு பாஜகவில் தனக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்பதை பொதுவெளியில் பேசி வந்தார்.
மேலும் அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவிலிருந்து விலகுவதாக கூறி மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், விஜய சாந்தி நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
அதன் படி, நடிகை விஜய சாந்தி அக்கட்சியின் தெலங்கானா தேர்தலுக்கான பரப்புரை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் விஜயசாந்தி காங்கிரஸுக்கு சென்றிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
actor vijaya santhi joined congress party