ஓபிஎஸ், இபிஎஸ்-யை முந்திக்கொண்டு முதல் ஆளாக களத்தில் இறங்கிய சசிகலா!
ADMK 50 Sasikala start
திமுகவில் இருந்து வெளியேறிய மறைந்த முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் கடந்த 1972, அக்டோபர், 17-ந்தேதி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினர்.
இந்நிலையில், கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், வருகிற 17-ந்தேதி 51-வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது.
50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அன்றைய தினம் வழங்கி சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் கொடி ஏற்றி அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தவருமான சசிகலாவும், அதிமுகவின் பொன்விழா நிறைவு விழாவை கொண்டாட திட்டமிட்டு இருந்தார்.
அதிமுகவின் பொன்விழா நிறைவு விழாவை முன்னிட்டு இபிஎஸ், ஓபிஎஸ் இன்னும் ஏற்பாடுகளை செய்யாத நிலையில், சசிகலா இன்று ராமாபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையுடன் தொடங்கி விட்டார்.
வரும் 17ஆம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு சசிகலா வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய வகையில், 4 ஆயிரம் சதுர அடியில் மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.