ஒரு கட்டாயத்தால் தான் பாஜகவுடன் கூட்டணி - அதிரவைத்த அதிமுக நிர்வாகி!
ADMK BJP Alliance issue
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடங்கள் உள்ள நிலையில், இப்போதே அரசியல் காட்சிகள் தங்களின் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளன.
அன்னமையில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், திருப்பூரில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சமூகத்தினர் இதனால் வருந்த தேவையில்லை என்றும், அவர்களது உணர்வுகளை அ.தி.மு.க. மதிக்குமென அவர் குறிப்பிட்டார்.
மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட திருப்பூர் மாநகர மேயர் முன்னாள் எதிர்க்கட்சிக் கொறடா கண்ணப்பன், பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்டாயமான சூழ்நிலையின் காரணமாக அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கினார். அதே சமயம், இஸ்லாமிய மக்களின் பக்கம் அ.தி.மு.க. உறுதியாக துணைநிற்கும் என்று உறுதியளித்தார்.