2026 அதிமுக-பாஜக கூட்டணி! அண்ணாமலைக்கு அறிவுரை! தமிழிசை சௌந்தர்ராஜன் பரபரப்பு பேட்டி!
ADMK BJP alliance issue EPS vs Annamalai vs Tamilisai
எடப்பாடி பழனிச்சாமி குறித்து மோசமாக, அண்ணாமலை விமர்சனம் செய்திருந்த நிலையில், தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலை கூட்டணியோடு சந்தித்த அதிமுக - பாஜக, கடந்த 2024 மக்களாவதி தேர்தலில் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து தோல்வியை சந்தித்தன.
இந்த தோல்விக்கு காரணம் கூட்டணி முறிவு தான் என்ற ரீதியில், அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பேச தொடங்கி, இன்று மிக மோசமாக விமர்சித்து கொள்ளும் நிலைக்கு வந்து உள்ளனர்.
இந்த நிலையில், வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்றும், தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதைகளை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த அண்ணாமலையின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், “மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால், அது மேடையில் மட்டும் முடிவு செய்வது இல்லை” என்று தெரிவித்தார்.
தமிழிசையின் இந்த பதில், அண்ணாமலையின் கூட்டணி கருத்திலிருந்து விலகி இருப்பதையும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி பாஜக கூட்டணி வைக்க விரும்புவதை காட்டுவதாகவும் அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
ADMK BJP alliance issue EPS vs Annamalai vs Tamilisai