மதுரை : வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் - அதிமுக வேட்பாளர் தேர்தல் ஆணையரிடம் புகார்! - Seithipunal
Seithipunal


மதுரை : வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் - அதிமுக வேட்பாளர் தேர்தல் ஆணையரிடம் புகார்!

 

 தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தனது வெற்றியை உறுதி செய்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக மத்தியில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில் யார் வெற்றி பெற்றவர் என்று உறுதியாகவுள்ள நிலையில், மதுரை பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிட வந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.

 

அப்போது அவர் கூறியதாவது, "மதுரை பாராளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். காலையில் தபால் ஓட்டுக்கள் முதலில் எண்ணப்பட்ட போது, பல தபால் கவர்கள் ஒட்டப்படாமல் பிரிந்த நிலையில் இருந்தன.

 

மேலும் வாக்களித்தவர்களின் கையெழுத்துக்களும் அடித்தல், திருத்தலுடன் இருந்தன. இதனை நான் சுட்டிக் காட்டிய போது, தேர்தல் நடத்தும் அலுவரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா மிகவும் மெத்தனமாக பதிலளித்தார்.  இதையடுத்து மேலும் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் மதுரை பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு புகார் அளிக்க உள்ளேன்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Candidate Gives Complaint to Election Comission to Stop Vote Counting in Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->