அதிமுக முன்னாள் அமைச்சர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக எம்.பி., சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்ற தமிழக அரசின் உத்தரவு உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விசண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் பொழுது தன்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு வழங்கி வந்தது. 

அதனை கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய தமிழக அரசு திடீரென விலக்கிக் கொண்டது. மேலும் தனக்கு துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை.

தற்பொழுது கொலை முயற்சி வழக்கில் சாட்சியம் விசாரணை கட்டத்தை எட்டி உள்ள நிலையில் தற்பொழுது பாதுகாப்பை விளக்கியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். எனக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, மனுதாரர் எம்.பி., சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், போலீஸ் பாதுகாப்பு கோரி மனுதாரர் அளித்த மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK CV S case Chennai HC Judgement 23


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->