தொகுதி பங்கீடு: அதிமுக - தேமுதிக இடையே இன்று பேச்சுவார்த்தை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க - தே.தி.மு.க இடையே இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

கடந்த ஒன்றாம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையும் ஆறாம் தேதி இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையும் நடந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

தே.மு.தி.கவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி உள்பட 4 தொகுதிகள் ஒதுக்க அ.தி.மு.க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் வட சென்னைக்கு பதில் வேறு தொகுதி தர வேண்டும் என தே.மு.தி.க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுக குழுவுடன் தே.மு.தி.க பேச்சு வார்த்தை குழுவினர் ராயப்பேட்டை உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொகுதி பங்கீடு உட்பட அனைத்தும் இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை சமூகமாக சென்று கொண்டிருப்பதாக பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMDK Constituency sharing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->