கூட்டணிக்கு ஓகே சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்! பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஒத்த கருத்துடைய கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க தயார் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு அவர் அளித்த பதில், வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க தயாராக உள்ளது. அதிமுகவின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம். 

திமுகவில் பதவிக்கு வருவோர் அவர்களின் குடும்பத்தினராகவே உள்ளனர். கருணாநிதியின் குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் முக ஸ்டாலின் ஒரு கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது.

அந்த அளவுக்கு திறமையில்லாத ஒருவர் என்னைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த சாதனைகளை புள்ளிவிவரங்களுடன் "துண்டுசீட்டு இல்லாமல்" சொல்கிறேன். 

நீங்கள் செய்த திட்டங்களை நீங்கள் பேசுங்கள். நீங்கள் அமைக்கும் மேடைக்கே நான் வருகிறேன். மக்கள் தீர்ப்பு அளிக்கட்டும். அதற்கு நாங்கள் தயார்!

ஆனால், அவதூறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். அதற்கான பதிலடியை கொடுப்போம்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Alliance BJP TVK PMK VCK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->