உறவை முறித்த ஓபிஎஸ்! எடப்பாடி பழனிசாமியின் நச் பேட்டி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேர்மையானவராக இருந்தால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்றார்.

ஓ பன்னீர்செல்வம் மீண்டும் உங்களோடு இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருக்கிறாரே என்று  செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்க்கு எடப்பாடி பழனிசாமி, "திமுகவின் பி டீமாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். 

எங்களுக்கே போதுமான அளவு நீர் இல்லை, தமிழகத்துக்கு தர முடியாது என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி கே சிவகுமார் அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, "மேகதாது அணை கட்டுவது என்பது ஒருபோதும் நடக்காது. தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக மாநில அரசு பின்பற்ற வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் மது விற்பனையை படிப்படியாக குறைக்க வேண்டும். மதுவின் தீய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Say About OPS press meet july 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->