பரபரப்பான சூழலில் சற்றுமுன் தொடங்கிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
ADMK Edappadi Palaniswami meet
தமிழகத்தில் தற்போதே தொடங்கியுள்ள 2026 தேர்தல் பரபரப்புக்கிடையே, சற்றுமுன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தபடி, இந்த கூட்டம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சற்றுமுன் தொடங்கியுள்ளது.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் முக்கியமான கலந்தாய்வு இது என்பதால், சுடச்சுட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கூட்டத்தில், 2026 தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல் திசை திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களுக்கு நேரடி வழிகாட்டல், கூட்டணிப் பிரச்சாரம் தொடர்பான திட்டமிடல், கூட்டணிக் கட்சிகளுடனான பணியாளர்களின் ஒத்துழைப்பு போன்ற அம்சங்கள் ஆலோசிக்கப்படலாம்.
அதே சமயம், மாவட்டங்களிலுள்ள கட்சி நிலைப்பாடுகள், உள்ளூர் எதிர்ப்புகள் உள்ளிட்டவை குறித்து மேலிடத்திற்கு கோரிக்கைகள் வைக்கப்படும் வாய்ப்பும் உண்டு.
English Summary
ADMK Edappadi Palaniswami meet