வரும் 24 ஆம் தேதி... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி விட்டுள்ள முக்கிய அறிவிப்பில், "கழகப் பொதுச் செயலாளர் கழக நிறுவனத் தலைவர், 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியாரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி V.N. ஜானகி அம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், 24.11.2024 - ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெறும்.

திருமதி ஜானகி அம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் 'படத் திறப்பு, மலர் வெளியிடுதல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி' உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற உள்ளன.

நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

C. பொன்னையன் அவர்கள்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர்

டாக்டர் C. விஜயபாஸ்கர், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

கடம்பூர் C. ராஜூ, M.L.A., அவர்கள்
கழக அமைப்புச் செயலாளர்
தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர்

முனைவர் வைகைச்செல்வன் அவர்கள் கழக இலக்கிய அணிச் செயலாளர் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

திரைப்பட இயக்குநர் R.V. உதயகுமார் அவர்கள் கழக கலைப் பிரிவுச் செயலாளர்

'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அம்மையார் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களுக்கும் பெரும் புகழ் சேர்த்திடும் வகையில், கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கலைத் துறையைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், அம்மையார் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->