வசமாக சிக்கிய எடப்பாடி பழனிச்சாமி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார்.

இந்த தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில், சில தவறான தகவல்களை தெரிவித்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேனியை சேர்ந்த மிலானி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சேலம் நீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

சேலம் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. 

அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. 

அதன்படி, காவல்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் போலீசார் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் மீது விசாரணையை தொடரலாம் என்றும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Chennai HC Judgement Election Nomination issue case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->